த.வெ.க.வில் ஐக்கியமாகிறாரா...? - கேள்வி கேட்ட செய்தியாளர்களை வறுத்தெடுத்த சி.வி.சண்முகம்...!
Is he uniting with Tvk CV Shanmugam grilled reporters who asked questions
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள அணிச்சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் திடீரென அணி மாறி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று மாலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்தபோது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, “உங்கள் அணியில் இருந்த 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததும், 5 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியதும் ஏன்?” என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “இதுகுறித்து பின்னர் விரிவாக விளக்கம் அளிக்கிறேன்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.
இதையடுத்து காரில் ஏறி புறப்பட தயாரான அவரிடம், “உங்கள் அணியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 25-ல் இருந்து 17 ஆக குறைந்துவிட்டதே?” என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சி.வி. சண்முகம், “25 என்பது 35 ஆகவும் மாறலாம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?” என மர்மமாக பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, “நீங்களும் த.வெ.க.வில் இணைய வாய்ப்பு உள்ளதா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “தேவையற்ற கேள்விகளை கேட்க வேண்டாம்” என கடுமையான தொனியில் பதிலளித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
English Summary
Is he uniting with Tvk CV Shanmugam grilled reporters who asked questions