தமிழகம் முழுவதும் நாளை மறியல் போராட்டம்! வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மோடி ஆட்சியின் வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும், நாளை (7.9.2023) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அலுவலக செயலாளர் வெ. ராஜசேகரன் விடுத்துள்ள அறிவிப்பில், "மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்கிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை (07.09.2023) ரயில் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தென்சென்னை மாவட்டக்குழு சார்பில், நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெறும் மறியலில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்கின்றனர்.

வடசென்னை மாவட்டக்குழு சார்பில், நாளை காலை 10.30 மணிக்கு மூலக்கடை, யூகோ வங்கி முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு 10.30 மணிக்கு நடைபெறும் மறியலில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்கிறார்.

மத்திய சென்னை சார்பில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்ட செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்கின்றனர்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்கள் சார்பில் நிருபர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிட வேண்டும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Protest Announce 692023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->