கோவை விமான நிலையத்திற்கு தொடரும் வெடி குண்டு மிரட்டல் ..! - Seithipunal
Seithipunal



கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு இரண்டாவது முறையாக இன்று (ஜூன் 24) காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப் பட்டுள்ளன.

கோவை - அவிநாசி சாலையில் உள்ள 'சிட்ரா' பகுதியின் அருகே கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் உள்நாட்டு விமான சேவைகளும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கான சர்வதேச விமான சேவையும் நடைபெறுகிறது. 


நாளொன்றுக்கு 9 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 24) காலை ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு ஈ - மெயில் மூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கோவை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 40 விமான நிலையங்களுக்கு ஈ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று 2ஆவது முறையாக கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 

இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. மேலும் கண்கணிப்பு பணிகளும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covai International Airport Recieving Continuous Bomb Threat


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->