ஈசிஆர் சம்பவம் - நான்கு இளைஞர்களுக்கு 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.!
court custody to ecr issue arrested peoples
ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, துரத்தி அத்துமீறும் வகையில் இளைஞர்கள் சிலர் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவின.
இதையடுத்து அரசியல் கட்சியினர் பலரும் பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது என்றும், உடனடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன் படி போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு வாலிபர்கள் மற்றும் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரை 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மீதமுள்ள மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
court custody to ecr issue arrested peoples