16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கணவன், மனைவி போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கணவனையும் உடந்தையாக இருந்த மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி அருகில் 16 வயது சிறுமி ஒருவர் உறவினர் வீட்டில் தங்கி படித்து  வந்துள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டின் மேல்மாடியில் ஓம்சக்தி - கவிதா தம்பதியினர் குடியிருந்தனர். இந்நிலையில், சம்பவதன்று, அந்த சிறுமியை அழைத்த கவிதா அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு அவரிடம், உனது மாமா உன்மீது ஆசைப்படுகிறார். வீட்டிற்கு போய் அவர் சொல்வதை கேட்டு நடந்து கொள் என கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுக்கவே உன்னையும் உனது தங்கையையும் படிக்கவைக்கிறார் நீ அங்கு செல்லவில்லை எனில் படிக்க முடியாது எனவும் உனது தாயை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

அந்த சிறுமியை வீட்டினுள் வைத்து கவிதா வெளியே தாழ்ப்பாள் போட்டு சென்றுவிட்டார். அப்போது, அந்த சிறுமியின் வாயில் துணியை அடைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஓம்சக்தி மற்றும் அவரது மனைவி கவிதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple arrested in POCSO Near Dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->