வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை நியமிக்க விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்! மாநகராட்சி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்களில் வேட்பாளர்களுக்கான முகவர்களை நியமணம் செய்வதற்கான படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022யை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களுக்கான முகவர்களை நியமிக்க படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இன்று (14.02.2022) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்–2022, பெருநகர சென்னை மாநகராட்சியின்  200 வார்டுகளுக்கு  உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பதிவாகும் வாக்குகள் 22.02.2022 அன்று எண்ணப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்களுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக 15 இடங்களில் வாக்கும் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் தங்களின் முகவர்களை நியமிக்க படிவம் 24யை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.
பெருநகர சென்னை 

மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மொத்தம் 2,670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  ஒரு வேட்பாளர் தனது வார்டிற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மேசைக்கு ஒருவர் எனவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு ஒருவர் எனவும் முகவர்களை நியமிக்க படிவங்களை வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர்  திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Counting centre agents


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal