போக்குவரத்து துறையில் ஊழல்.. மாணவர்கள் கூட்டமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!  - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறையில் பெருகி வரும் ஊழல் முறைகேட்டை தடுக்க மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.


 இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறையில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போக்குவரத்து துறையில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் இதனை பத்திரிக்கை மட்டும் ஊடகங்கள் மூலமாக அறிகிறோம் தாங்களும்  அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். 

புதுச்சேரி அரசு துறைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது மரபாக கடைபிடித்து வருகிறோம் ஆனால் போக்குவரத்து துறை மட்டும் இடமாற்றம் என்பதே இல்லாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை போக்குவரத்து துறையில் பொதுமக்களின் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் புரோக்கர்கள் இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலை தொடர்ந்து வருகிறது சமீபத்தில் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் அவர்களுக்கு அளித்த உரிமத்தில் குளறுபடிகள் செய்திருப்பதாகவும் அதில் மூன்று லட்சத்திற்கு மேலாக லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் செயல்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து இருந்தனர்

மேலும் போக்குவரத்து PRTC ஊழியர்கள் தங்களது உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்திலும் நீண்ட நாட்களாக பணி செய்யும் சில அதிகாரிகளின் வாயிலாக ஊழல் முறைகேடு பெருகி உள்ளதாகவும் ஊழியர்களின் வளர்ச்சிகள் தொடர்பாக துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடி வந்த செய்தியும் அறிந்தோம். 

இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு துறையில் குற்றச்சாட்டுகள் முன்மொழியப்பட்டும் மரபுக்கு மாறாக போக்குவரத்து துறையில் மட்டும் பணியிட மாற்றம் என்பதே இல்லாமல் நீடிப்பதன் காரணம் புரியவில்லை. இதனை பொறுப்பேற்று செய்ய வேண்டியவர்களும் அமைதி காத்து நிற்பது அனைவரின் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருந்தாலும் துறை அதிகாரிகளின் தொடர்பில் உள்ள புரோக்கர்கள் உதவியில்லாமல் ஓட்டுநர் உரிமம் கூட பெற முடியாத சூழல் நிலவி வருகிறது என எழும் குற்றச்சாட்டுகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மேலும் தனியார் பேருந்துகளுக்கு சாதகமாக PRTC பேருந்துகளின் வழித்தடங்களை மாற்றி அமைப்பதால் பல பேருந்துகள் ஓடாமல் மக்கி மண்ணாகும் சூழ்நிலையில் இருப்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் எஸ்வி ட்ராவல்ஸ் லிமிடெட் என்ற பெயரில் PRTC எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கு ஆட்கள் தேவை என ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது புதுச்சேரி மாநிலத்தில் எத்தனையோ படித்த இளைஞர்கள் முறையான உரிமங்களை வைத்திருந்தும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டிய துறை, தனியார் நிர்வாகத்திடம் ஓட்டுநர்களை எடுக்க அதிகாரம் வழங்கியது அரசுக்கு தெரியுமா என்ற கேள்வியை முன் வைக்கிறோம். தனியாரை ஊக்குவிப்பதில் காட்டும் ஒரு துளி அக்கறையை கூட துறை வளர்ச்சியில் காட்டியிருந்தால் போக்குவரத்து துறை பெரும் வளர்ச்சியில் செயல்பட்டு இருக்கும். ஆனால் அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரின் சுயலாபத்திற்காக ஒட்டுமொத்த போக்குவரத்து துறையை செயலற்ற நட்டத்தில் இயங்கும் துறையாக மாற்றி வைத்திருக்கிறார்கள் என்ற பொதுமக்களின் சந்தேகத்தை  உறுதிப்படுத்துகிறது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் சொந்தமாக அரசு பேருந்து இருந்து வந்தது ,ஆனால் தற்போது அப்பேருந்துகள் எல்லாம் மக்கி மண்ணாய் போய் இருப்பதை ஆய்வு செய்தால் கண்டறிந்து கொள்ளலாம். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கென உருவாக்கப்பட்ட இலவச பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் சூழல் உள்ளது. கடந்த கால ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மாணவர்களுக்காக இயக்கப்பட்டது ஆனால் தற்போது 70 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன எனத் தகவல். இப் பேருந்துகளை தனியாருக்கு வழங்குவதற்கு பதிலாக பி .ஆர். டி. சி. இல் உள்ள பேருந்துகளை புதுப்பித்து அரசு பேருந்தை மாணவர்களின் இலவச பேருந்தாக இயக்கலாம் இதனால் தனியாருக்கு விரயமாக்கும் பணம் அரசுக்கு மிச்சமாகும். இது தொடர்பாக போக்குவரத்து துறைக்கு பலமுறை கடிதம் கொடுத்தும் துறை கண்டு கொள்ளவில்லை.

மேலும் போக்குவரத்து துறையில் பணி செய்யும் ஒரு  அதிகாரி RTO பதவியில் இருந்து பதவி உயர்வு கொடுத்தும் RTO பதவிலேயே தொடர்வதாக புகார்கள் எழுகின்றன. அத்தகைய அளவிற்கு இப்பதவி மூலதனத்தை தருகிறதா என்ற  பொது மக்களின் இச் சந்தேகத்தை தங்கள் முன் வைக்கிறோம்.   

எனவே அய்யா அவர்கள் இவ்வகாரத்தில் தலையிட்டு மரபுக்கு மாறாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து துறையில் தொடர்ச்சியாக பணி செய்து வரும் அனைவரையும் இடம் மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய உத்தரவின் மூலமாக துறையின் மேம்பாட்டை கொண்டுவர முடியும் என நம்புகிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corruption in the transport sector Students' Federation Accusations


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->