தனியாக குளித்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
Corporation employee arrested for women bathing video record
குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று காலை அவரது வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக மாணவி குளிப்பதை எட்டிப் பார்த்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிட, அந்த நபர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து மாணவி குளிப்பதை பார்த்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதன் பின்னர் பூக்கடை அனைத்து மகளிர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.
இதில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாநகராட்சி 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணி புரியும் மகிமை தாஸ் என்பது தெரிய வந்தது.
மேலும் மாணவி குளிப்பதை எட்டிப் பார்த்ததோடு, செல்போனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
English Summary
Corporation employee arrested for women bathing video record