சென்னை மக்களே அச்சம் வேண்டாம்! முகக்கவசம் கட்டாயமா? வெளியான பரபரப்பு தகவல்!
Corona Virus Chennai Face mask
2020ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக அரசு மருத்துவ வசதிகளை விரைவாக மேம்படுத்தி, பொதுமக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி பணிகளை தீவிரமாக செய்ததன் விளைவாக, மாநிலம் மீண்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் சமூக அளவில் மிகக் குறைந்ததாகவே உள்ளது.
2025ம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மிகச்சிறிது மட்டுமே காணப்படுகிறது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் மே 4ம் தேதி வெளியான வாராந்திர அறிக்கையில் தெற்காசிய நாடுகள் — இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியவற்றில் பரவல் மிகக் குறைவாகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பல இடங்களில் தகவல்கள் பரவிய நிலையில், மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தெரிவித்தது: “முகக்கவசம் அணிய அரசு எந்த கட்டாய அறிவிப்பும் வழங்கவில்லை. பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. தற்போதைய கொரோனா வீரியம் இல்லாதது. தேவையான முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன” என கூறினார்.
English Summary
Corona Virus Chennai Face mask