முதல் முறையாக கொரோனா தடுப்பூசி, தமிழகத்தில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்தை உலக நாடுகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

சமீபத்தில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாகியுள்ளதாக புனேவை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக்  நிறுவனம் அறிவித்தது. இந்த நிறுவனம், இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் உடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

"கோவேக்சின்" என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை, 2 விதமான சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்தியா முழுவதும் 12 இடங்களில் மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி சோதனை நடைபெற்றது. 

இந்நிலையில், தமிழகத்தில் காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona vaccine test in tamilnadu peoples


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->