பழனி கோவிலில் பக்தர்களை பதம் பார்த்த கூலிங் பெயிண்ட் பாதை.!! தற்காலிகமாக மூடல்.! - Seithipunal
Seithipunal


பழனியில் பக்தர்களை பதம் பார்த்த கூலிங் பெயிண்ட் பாதை.!! தற்காலிகமாக மூடல்.!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இங்கு இந்த வருடத்திற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 

இதனை முன்னிட்டு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து பாத யாத்திரையாக பழனிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக கடந்த வாரம் கூலிங் பெயிண்ட் பாதை அமைக்கப்பட்டது. பக்தர்கள் இந்த பாதையில் நின்றால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்காது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும்,  தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள் இந்த பாதையில் அதிகளவில் நடந்து வருவதால் ஈரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்னால் வரும் பக்தர்கள் கீழே வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த பாதையில் சுமார் 50க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காயமடைந்தவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன் பக்தர்களின் வசதிக்காக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooling paint path temprory close in palani murugan temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->