சீமான் குறித்து சர்ச்சை பேச்சு..கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின்!
Controversy over Seeman Bail for those arrested
தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டு பேசிய ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டு பேசிய ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஏற்கனவே தெலுங்கு இன மக்கள் மற்றும் நாயுடு, நாயக்கர் சமுதாயத்தை பற்றி தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் சீமான் குறித்த நாயுடு, நாயக்கர் இனத்தவர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமினில் வந்த சந்தோஷை அவர் இல்லத்திற்கு சென்று, ஆண்டிபட்டி வட்டார நாயுடு, நாயக்கர் மகாஜன சங்கம் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் அவரை வரவேற்று ஆறுதல் கூறினர். தொடர்ந்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வழக்குகளை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
English Summary
Controversy over Seeman Bail for those arrested