தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு..! - Seithipunal
Seithipunal


தமிழக பொறுப்பு டிஜிபியாக சீனியாரிட்டி பட்டியலில் 09 வது இடத்தில் உள்ள  ஜி.வெங்கட்ராமனை நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், இவரது ஓய்வுக்கு பின், டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவரது மனுவில் கூறியுள்ளதாவது: டிஜிபி நியமனத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. டிஜிபி பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு 03 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அரசு டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களின் பரிந்துரை பட்டியலை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு பட்டியல் அனுப்பாதது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்ற உத்தரவை மீறி பொறுப்பு டிஜிபியை தமிழக அரசு நியமித்துள்ளது. என்று அந்த மனுவில் ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக முதலமைச்சர் முக ஸ்டாலின், சங்கர் ஜிவால் பணி ஓய்வை தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் என்பவரை நியமித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக நிர்வாக அருண்ராஜ் உள்பட பலரும் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Contempt case filed in Supreme Court against Venkatramans appointment as DGP in charge of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->