பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு: திருமணமான 10 மாதத்தில் டாக்டர் எடுத்த விபரீத முடிவு!
Connection with many womenDoctor makes a disastrous decision in 10 months of marriage
திருமணமான 10 மாதத்தில் 12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஜோதீஸ்வரி மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும், ராமநாதபுரத்தை சேர்ந்த யோதீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. என்ஜினீயரான யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் யோதீஸ்வரன், மனைவியை பிரிந்து சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது, மனைவியை பார்க்க சென்னைக்கு வந்து சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா விடுமுறை என்பதால், பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டில் தனது சகோதரி முத்துலட்சுமி வீட்டுக்கு ஜோதீஸ்வரி சென்றார். அங்கு மாலைவரை இருந்துவிட்டு கிளம்பிய அவள் அங்குள்ள 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார் .
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார் தற்கொலை செய்த ஜோதீஸ்வரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோதீஸ்வரிக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக ஜோதீஸ்வரி எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா பழக்கம் உள்பட பல்வேறு தீய பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் டேட்டிங் செயலி மூலமாக 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து அவர்களுடன் பழகி வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்..
மேலும் கோடம்பாக்கத்தில் தாயுடன் அறை எடுத்து தங்கி இருந்த ஜோதீஸ்வரி, நேற்று அக்கா வீட்டுக்கு சென்றபோதுதான் இந்த சோக முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Connection with many womenDoctor makes a disastrous decision in 10 months of marriage