‘யூடியூப்’ பார்த்து முதலீடு.. பணத்தை இழந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
The cruelty faced by a woman who lost her money after investing by watching YouTube
சென்னை பல்லாவரம் அருகே தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணிநகர் தெருவைச் சேர்ந்த அருண் என்பவரின் மனைவி தனது மனைவி வனஜா ,இவர்கள் தனது மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான கணவர் அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
மனைவி வனஜா, ‘யூடியூப்’ பார்த்து ஆன்லைனில் பங்கு சந்தையில் சிறிய அளவில் முதலீடு செய்தார். அதில் அதிக லாபம் கிடைக்கும் என எண்ணிய வனஜா, தனது கணவருக்கு தெரியாமல் கடன் செயலி மூலம் ரூ.2.5 லட்சம் கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்.
ஆனால் அதில் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் இழந்து விட்டதாக கூறப்படுகிறது . இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததுடன் கடனை கேட்டு தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த வனஜா, தனது வீட்டில் யாரும் இ்ல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தற்கொலை செய்த வனஜாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் “நான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி தனது கணவருக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பிவிட்டு அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
The cruelty faced by a woman who lost her money after investing by watching YouTube