இமேஜை வைத்து வெற்றி பெறமுடியாது.. விஜய் மீது செல்லூர் ராஜு கடும் தாக்கு!
It is not possible to win based on the image Sellur Raju launches a strong attack against Vijay
திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டார். அவருடைய தலைமை பண்பை விமர்சிக்கக்கூடிய அளவில் ஆகிவிட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்..
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபகுதியில் புதிய பாலம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று தொடங்கி வைத்தார்.அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பல அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது.அமைச்சர் வீட்டில் ரெய்டு எல்லாம் தி.மு.க.வில் புதுசு இல்லை என்று கூறினார் .மேலும் மதுரை மாநகராட்சி விவகாரத்தில் குரல் கொடுத்த அ.தி.மு.க.என்று மீது தி.மு.க. நிலைக்குழு தலைவர் வாக்குமூலம் அளித்ததன் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் பண்பை பேச திருமாவளவனுக்கு என்ன நெருக்கடி வந்தது என தெரியவில்லை.திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டார். அவருடைய தலைமை பண்பை விமர்சிக்கக்கூடிய அளவில் ஆகிவிட்டார்.
எல்லோரும் களத்திற்கு வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய் களத்திற்கு வர வேண்டும். இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்.விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்வது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
எல்லாரும் எம்.ஜி.ஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் வருகிறது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
English Summary
It is not possible to win based on the image Sellur Raju launches a strong attack against Vijay