நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து.. 20 ஆயிரம் பேர் பயணம்!
Nagai Sri Lanka ship transport 20 thousand people are traveling
கடந்த ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ‘செரியாபாணி’ என்ற பெயரில் இயக்கப்பட்டது,ஆனால் இந்த கப்பலில் போதிய பயணிகள் வராத காரணத்தால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி ‘சுபம்’ நிறுவனத்தின் சார்பில் மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவை தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் , மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து 2-ம் ஆண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்வதற்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் 3 பகல், 2 இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் டிக்கெட் கட்டணத்தோடு ரூ.9 ஆயிரத்து 999 என சிறப்பு சலுகை திட்டம் உள்ளது என கூறினார் . அதேபோல மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Nagai Sri Lanka ship transport 20 thousand people are traveling