வாக்குத்திருட்டு புகார்: இன்று விளக்கம் அளிக்கிறது தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கர்நாடகம், அரியானா மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில், பா.ஜனதா கட்சி வாக்குகளை திருடியதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, குற்றம் சாட்டினார்.  அதற்கான ஆதாரங்களை முன் வைப்பதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை இன்று நடத்துவதாக அறிவித்து உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இது நடக்கிறது. அது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பீகாரில் 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். இதுதொடர்பாக உத்தராவில், “பீகாரில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களையும் இணைத்து வெளியிட வேண்டும் தெரிவித்தது.

இது ஒருபுறம் இருக்க, ராகுல் காந்தி இன்று பீகாரில் யாத்திரை தொடங்க உள்ளார்.  இந்த யாத்திரைக்கு ‘வாக்கு அதிகார் யாத்திரை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.பீகாரில் உள்ள சாசராம் பகுதியிலிருந்து கயா, முங்கர், பஹல்பூர், கதிகார், பூர்ணியா, மதுபானி, தர்பங்கா, பச்சிம் சாம்பரான் வழியாக அரா வரை ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது..இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election commission explains today about the vote rigging complaint


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->