பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - நேரம் பார்த்து அடிக்கும் காங்கிரஸ்!
Congress say about PM Modi Gas Cylinder rate
தேர்தல் தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
நாடு முழுவதும் அடுத்த 3 மாதங்களில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துவிடும் என்ற பயத்தினாலேயே, எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஐஎன்டிஐஏ கூட்டணியின் 2 கூட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், 3வது கூடம் விரைவில் நடக்க உள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் எப்படியாவது கரையேர வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
தற்போது சமையல் எரிவாயு விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளதற்கு காரணம், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சமையல் எரிவாயு உருளை விலையேற்றம் எதிரொலித்தது தான்" என்று விமர்சித்துள்ளார்.
English Summary
Congress say about PM Modi Gas Cylinder rate