தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த திரு.எலியாஸ் ஓவே அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த திரு.எலியாஸ் ஓவே அவர்கள் நினைவு தினம்!.

 எலியாஸ் ஓவே (Elias Howe, Jr. ஜூலை 9, 1819 – அக்டோபர் 3, 1867) ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்; தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததன் மூலம் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையைக் கொண்டுவந்தவர் தாமஸ் செயிண்ட் என்ற அறிஞர் ஆவார். 

 ஆனால் அவர் அதற்குரிய காப்புரிமையைப் பெற்றும் அதன் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து ஈடுபடாமல் இறந்து போனார். 1790 இலிருந்து பல பேர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 பேருக்கு மேல் ஐசாக் சிங்கர் உட்பட இந்த முயற்சிகளில் படிப்படியாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர். ஆனால் 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் இதற்கான காப்புரிமையை முதன் முதலாகப் பெற்றவர் எலியாசஸ் ஓவே என்பதால் தையல் எந்திர வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாளராக இவருடைய பெயர் பதிவாயிற்று.


குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர் கண்டிஷன்) தந்தை என்று போற்றப்படும் ஜான் கோரி 1803ம் ஆண்டு அக்டோபர் 03ம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பிறந்தார்.

இவர் சமுதாய சேவைகள், வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மேலும், இவர் சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார். சமரச மைய நீதிபதியாக 1841-ல் நியமிக்கப்பட்டார்.

மலேரியா, அறைகளைக் குளிரூட்டும் முறைகள், பனிக்கட்டி உற்பத்தி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவரது கட்டுரைகள் பிரபல அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.

பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் கருவியைக் கண்டறிந்தார்.

தற்போதைய அனைத்து விதமான ஏர் கண்டிஷன் கருவிகளின் பெரும்பாலான நுட்பங்கள், முதன்முதலாக இவர் கண்டறிந்த குளிரூட்டும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர் கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான் கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 52வது வயதில் (1855) மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Commemoration day of Mr Elias Howe the inventor of the sewing machine


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->