தந்தையை கொலை செய்த நபரை 17 ஆண்டுக்கு பிறகு பழி வாங்கிய கல்லூரி மாணவன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
college students murder famous rowdy pulkan rajkumar for avenge father murder
சென்னை டி.பி. சத்திரம் ஜோதி அம்மாள் நகரைச் சேர்ந்தவர் புல்கான் ராஜ்குமார். பிரபல ரவுடியான இவர் தொழிலை விட்டுவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ராஜ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் மனைவி மற்றும் குழந்தையின் கண்முன்னே ராஜ்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுச் சென்றது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து டி.பி. சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி செந்திலின் மகன் தந்தையின் கொலைக்காக 17 ஆண்டுகள் காத்திருந்து தற்போது பழிதீர்த்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு செந்தில் கொலை செய்யப்பட்டபோது 2 வயதாக இருந்த அவரது மகன் யுவனேஷ் தற்போது வளர்ந்து பெரியவனாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தையை கொலை செய்த ராஜ்குமாரை பழிக்கு பழியாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வரும் யுவனேஷ் தனது கல்லூரி நண்பர்கள் சிலரை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு திட்டம் போட்டு ராஜ்குமாரை கொலை செய்துள்ளதக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யுவனேஷ் மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தையைக் கொன்றவரை பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college students murder famous rowdy pulkan rajkumar for avenge father murder