பிரதமர் மோடியை சந்தித்து கமல்ஹாசன் வைத்த மிக முக்கிய கோரிக்கை!
PM Modi MNM Kamalhaasan meet
கமல்ஹாசன், கடந்த ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்றார். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.
இந்நிலையில், கமல்ஹாசன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமருடன் சந்தித்ததையடுத்து, தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு வருமாறு: "மரியாதை நிமித்தமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தேன். தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும், ஒரு கலைஞனாகவும் அவரிடம் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினேன். அதில் மிக முக்கியமானது கீழடி தொடர்பானது."
"தமிழ் நாகரிகத்தின் தொன்மையும், பெருமையையும் உலகிற்கு விளங்கச் செய்யும் முயற்சிகளில் பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
PM Modi MNM Kamalhaasan meet