பாலியல் வன்கொடுமை வழக்கு..வாலிபருக்கு 5 ஆண்டு சிறை!
Sexual assault case 5 years imprisonment for the youth
அம்பத்தூர் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பெற்றோர்களுடன் வசித்து வந்த 11 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கன்னியம்மன் கோயில் தெரு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் 35 என்ற குற்றவாளியை போலீசார் கடந்த 2022 ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அம்பத்தூர் மகளிர் காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2024 ஆண்டு திருவள்ளூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.அத்தகைய தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
English Summary
Sexual assault case 5 years imprisonment for the youth