ஆகஸ்ட் மாத பௌர்ணமி முழு நிலவை ஏன் 'மீன் நிலவு' என்று அழைக்கிறார்கள் தெரியுமா..? - Seithipunal
Seithipunal


வரும் ஆகஸ்ட் 09-ஆம் தேயன்று பௌர்ணமி முழு நிலவு வரவுள்ளது. இந்த நிலவு 'மீன் நிலவு' என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் வரும் முழு நிலவான ஸ்டர்ஜன் மூன் ( மீன் நிலவு), இது 2025-ஆம் ஆண்டில் இரண்டு இரவுகள் கொண்ட ஒரு சிறப்பு நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 09 சனிக்கிழமை காலை அதன் உச்சத்தை எட்டும். 2025-ஆம் ஆண்டில் மிகவும் கண்கவர் இரவாக இருக்கும் என்றும், பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமிக்க மற்றும் அரிய 02 இரவு முழு நிலவு வாய்ப்பை அளிக்கிறதாக கூறப்படுகிறது.

இந்த 09 ஆம் திகதி அன்று ரக்ஷா பந்தன் பண்டிகை வரவுள்ளது. இதனால் இது இந்தியாவில் ஒரு கலாசார முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 09, அன்று அதிகாலை 03:55 மணிக்கு (ஐஎஸ்டி நேரப்படி பிற்பகல் 01:25) ஸ்டர்ஜன் நிலவு அதன் உச்சத்தை அடையும் என்பதால் அதனை பார்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

அதவது, வடக்கு அரைக்கோளத்திலிருந்து சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற விரும்பும் மக்கள், ஆகஸ்ட் 08, மற்றும் ஆகஸ்ட் 09-ஆம் தேதிகளில் மாலைகளில் வானத்தைப் பார்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த இரண்டு இரவுகளிலும் சூரிய அஸ்தமனத்தைச் சுற்றி முழுநிலவு உதயமாகும் என்றும், இது அடிவானத்திற்கு அருகில் பெரியதாக தோன்றுவதால் ஒரு அற்புதமான காட்சியாக தெரியும் என்று கூறப்படுகிறது.

வட அமெரிக்காவின் கிரேட் லேக்ஸ் பகுதியில் உள்ள பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வரும் நிலவை இதை ஸ்டர்ஜன் மூன் (மீன் நிலவு ) என்று அழைத்துள்ளனர். அவர்களுக்கு பெரிய ஸ்டர்ஜன் மீன்கள் மிக எளிதாக கிடைத்தது பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு அழைத்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know why the full moon in August is called the Sturgeon Moon


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->