கனடா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில், கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!
Coco Gauff pair wins doubles title at Canada Open
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற்றுள்ளனர். இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, சீனாவின் ஜாங் ஷுய்-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி உடன் மோதினர்.
இதில் முதல் செட்டை 06-04 என கோகோ காப் ஜோடி வென்றது. ஆனால், அடுத்த 02-வது செட்டை 06-01 கோகோ காப் ஜோடி என இழந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி 03-வது செட்டை 13-11 என போராடி வீழ்த்தினர். இதன் மூலம் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, சாம்பியன் பட்டத்தைக் கைபற்றி அசத்தியுள்ளது.
ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கோகோ காப் தோல்வி அடைந்தாலும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Coco Gauff pair wins doubles title at Canada Open