அமெரிக்காவின் வரி விதிப்பு: இந்தியாவுக்கு ஆதரவாக ட்ரம்ப்பை சாடியுள்ள சீன வெளியுறவு அமைச்சர்..!
Chinese Foreign Minister slams Trump for supporting India on US tariffs
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு, அபராத வரி விதிப்பு செய்யப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அதன்படி இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பிரேசிலுக்கும் வேறு சில காரணங்களை சொல்லி, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, சீனாவுக்கும் அதிக வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீனத் தூதர் சூ பீஹாங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பிரேசில் அதிபரின் தலைமை ஆலோசகருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடினார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மற்ற நாடுகளை அடக்குவதற்கு வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும் என்றும், இது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை பலவீனப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அணுகு முறையை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Chinese Foreign Minister slams Trump for supporting India on US tariffs