பசுமைப் புரட்சியின் தந்தை'திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


பசுமைப் புரட்சியின் தந்தை'திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பிறந்ததினம்!.

 பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். 

 இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். 

 இவர் ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

 1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது 'இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்' என்று பல நாடுகள் கூறினர்.

 இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை சாதித்துக் காட்டினார். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

 ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98வது வயதில் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று மறைந்ததார்.

 புதுச்சேரி தமிழறிஞர், கவிஞரேறு திரு.வாணிதாசன் அவர்கள் நினைவு தினம்!.

 தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும். 

 இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்' வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. 

இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

 கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் தனது 59வது வயதில் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is the birthday of the father of the Green Revolution Mr M S Swaminathan


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->