விராட் கோலிக்குள்ள இவ்வளவு திறமைகளா..? தல தோனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!
Interesting information shared by Dhoni about Virat Kohlis talent
இந்திய கிரிக்கெட் அணியின் greatest of all time என்ற அனவைராலும் அழைக்கப்படும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் 'தல' மகேந்திரசிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 03 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
மஹி பாய் என்று அணி வீரர்களை செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் உள்ளார். விக்கெட் கீப்பங்கிலும் அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம். அதிலும் குறிப்பாக மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங்(lightning-fast stumping) செய்யும் திறமை படைத்தவர்.
இவர் இந்திய அணியின் இன்று நட்சத்திர வீரர்களாக திகழும் பலரை நமக்கு அடையாளம் காட்டியவர். அதன் வரிசையில், 'கிங்' விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற பல இளம் வீரர்களின் திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டியவர். 18 வருடங்களாக ஐ.பி.எல். தொடரிலும் அனைத்து அணியியில் சிறந்த கேப்டன் என முடிசூடிய மன்னன் என்று சொல்லலாம். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி 05 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளதோடு, 12 playoffs, 10 முறை (final) இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வைத்தவர்.

சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றின் போது கலந்து கொண்ட தோனி தனது நீண்டகால அணித் தோழர் விராட் கோலியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். இத கேட்ட விராட் கோலி சரிக்கர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, களத்திற்கு வெளியே விராட் கோலியின் பண்புகளைப் பற்றி தோனி மனம் திறந்துள்ளார்.
அதாவது, கிரிக்கெட்டைத் தாண்டிய குணங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது, கோலி ஒரு சிறந்த பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என்ற சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் (விராட் கோலி) நன்றாகப் பாடுவார். அவர் ஒரு நல்ல பாடகர். அவர் ஒரு நல்ல நடனக் கலைஞர். அதைவிட மிமிக்ரியில் சிறந்தவர். அவர் ஜாலியான மனநிலையில் இருந்தால் மிகவும், பொழுதுபோக்கு அம்சம் கொண்டவர்” என்று 'தல' எம்.எஸ். தோனி புகழ்ந்துள்ளார்.
English Summary
Interesting information shared by Dhoni about Virat Kohlis talent