புதிய துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி மற்றும் நட்டாவுக்கு அதிகாரம் வழங்கியுள்ள என்டிஏ..! - Seithipunal
Seithipunal


நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர் மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை தொடர்ந்து. துணை ஜனாதிபதி பதவி காலியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 09 ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

அதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நட்டாவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிகாரம் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ), பாராளுமன்ற வளாகத்தில் முக்கிய பாஜ தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. இதன் போது மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேடி(யூ)வின் லாலன் சிங், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு மற்றும் எல்.ஜே.பி (ராம் விலாஸ்) இன் சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தின் போது ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஜேபி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரம் அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

மோடி மற்றும் நட்டா துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். துணை ஜனாதிபதிக்கான ஓட்டெடுப்புக்கு ஒரு நாள் முன்பு, செப்டம்பர் 08 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மற்றொரு பெரிய கூட்டத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NDA has given authority to PM Modi and Nadda to select the new Vice Presidential candidate


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->