ரெயிலில் மறைந்துக் கொண்ட பயணிகள் - கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


ரெயிலில் மறைந்துக் கொண்ட பயணிகள் - கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்.!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 9.15 மணியளவில் பயணிகளுடன் மின்சார ரயில் ஒன்று சென்ட்ரல் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இந்த ரயில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலில் இருந்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.

இதற்கு பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் கற்களை வீசி எறிந்துள்ளனர். இதனால், அந்த பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து பயணிகள் சிலர் மின்சார ரயிலில் இருந்த கதவுகளை மூடுவதற்கு முயற்சி செய்தனர். ஆனால், கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். 

இந்தத் தாக்குதலில் கல்லூரி மாணவர்கள் சிலர் லேசாக காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பயணிகள் போலீசில் புகார் அளித்தனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அனைவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுப்பட்டு வருவதுடன் அவர்ககைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் ‌‌. இந்தச் சப்பினவாம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college students fight in perambur railway station


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->