உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் கல்லூரி மாணவியர்கள் அவதி! - Seithipunal
Seithipunal


வேடசந்தூர் அருகே அரசு கல்லூரிக்கு உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் கல்லூரி மாணவ மாணவியர்கள் அவதி அடைந்தனர் .

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் தண்ணீர்பந்தம் பட்டியில்   அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்றுவருவது குறிப்பிடத்தக்கது இங்கு பயின்றுவரும்மாணவமாணவியர்கள் திண்டுக்கல்,வேடசந்தூர்,வடமதுரை,குஜிலியம்பாறை,அய்யலூர் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து வருகின்றனர் .

இந்நிலையில் கல்லூரியின் தொடக்க நேரம் காலை 9:15 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்படாததால் மாணவ மாணவியர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிவருவதாக  கூறப்படுகிறது .

இது தொடர்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, மேலும் புகார் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இன்று வரை பேருந்துகள் இயக்குவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது மேலும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால் அதில் பயணிப்பதற்கு மாணவ மாணவியர்களுக்கு அச்சம் உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் அதிக நெரிசல் உள்ள காரணத்தால் படியில் பயணம் செய்கிறார்கள் என்றும் இதனால் மாணவ மாணவியர்களுக்கு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்றி வருகின்றனர்.

 கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தையும்உயிர்யையும் காக்க வேண்டிய தார்மீகப் பொருப்பு தங்களுக்கு உண்டு என்பதால் மாணவர்களுக்கு ஏதுவாக அப்பகுதியில் அரசு பேருந்துகளை நேரத்திற்கு இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கல்லூரி நிர்வாகமும் மாணவ மாணவியர்களும் ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College students are suffering due to the buses not operating at the right time


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->