யார்கூட இவ்ளோ நேரம் பேசுற - பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை.!!
college student sucide in tirunelveli
யார்கூட இவ்ளோ நேரம் பேசுற - பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுகம்பட்டி, காலனி தெருப் பகுதியைச் சேர்ந்தவர் வனராஜ் மகன் அன்புகுமார். இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வனராஜ் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அன்பு குமார் வீட்டிற்கு வந்ததிலிருந்து தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? என்றுக் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அன்புகுமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அன்பு குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அதன் பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரண்ட் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அன்புக்குமார் சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
college student sucide in tirunelveli