திருவள்ளூர் : கல்லூரி விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!
college student sucide college hostel at thiruvallur
திருவள்ளூர் : கல்லூரி விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகள் ஜெயா. இவர் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஜெயா நேற்று இரவு கல்லூரி விடுதியில் உடனிருந்த மாணவிகளிடம் தனக்கு தலை வலிப்பதாகவும், அதனால் இரவு படிப்பிற்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அறையில் தனியாக இருந்த ஜெயா, துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இரவு படிப்பிற்கு சென்ற சக மாணவிகள் அறைக்கு வந்துள்ளனர்.
அப்போது ஜெயா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், மருத்துவமனை சார்பில் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீசார் மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் படி போலீசார் அந்த காதலனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide college hostel at thiruvallur