மயிலாடுதுறையில் சோகம் : சிறுவர்கள் சண்டையை தடுத்த கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து.!
college student injured for knief attack in mayiladuthurai manalmedu
மயிலாடுதுறையில் சோகம் : சிறுவர்கள் சண்டையை தடுத்த கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவர் புத்தூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள உத்திராபதியார் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்து கோயிலில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த சஞ்சய்குமார் தட்டிகேட்டுள்ளார்.இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுவர்களில் ஒருவர் தன் தந்தையிடம் சஞ்சய்குமார் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை உறவினர்களுடன் சென்று சஞ்சய் குமாரை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால், பலத்தக் காயமடைந்த சஞ்சய்குமாரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு சஞ்சய்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சஞ்சய்குமாரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற இருவரையும் கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student injured for knief attack in mayiladuthurai manalmedu