#BIGBreaking || தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுகிறது.! சற்றுமுன் தமிழக அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கூடுதல் தளர்வாக்களுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 டிசம்பர் 14 முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி 14 -12 -2003 உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7 12 2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் 7 12 2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 2020 -21 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 1 -2 -2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

வழிகாட்டுதலை பின்பற்றி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் 7 -12 -2020 விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collage open in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->