பெண்கள் அரசியலில் ஈடுபட முடியாத இந்தியாவின் அண்டைய நாடு..!
Indias neighboring country where women cannot participate in politics
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை 2021-இல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தலிபானின் புதிய அரசாங்கத்தின் எந்தவொரு உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவிலோ அல்லது அமைச்சரவையிலோ ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.
அதாவது, இன்று உலகில் பெண்கள் அரசியலில் ஈடுபட முடியாத ஒரே நாடாக மாறியிருப்பது ஆப்கானிஸ்தான் மாறியுள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் பாதிப் பேராக இருக்கும் பெண்களின் குரல்கள் அதிகார மையங்களில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் நாட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் இல்லாதபோது, அந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சமநிலையும் பாதிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது, பெண்களின் பங்களிப்பு இல்லாதது வெறும் அரசியல் சிக்கல் மட்டுமின்றி, அது அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் முடக்கியுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் முடியாத சூழலில், குடும்ப வருமானமும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச அழுத்தம் இருந்தபோதிலும், தலிபான் நிர்வாகம் பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதில் பிடிவாதமாக இருப்பது, மனித உரிமை ஆர்வலர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Indias neighboring country where women cannot participate in politics