விஜய் - சங்கீதா வழக்கு...! - விவாகரத்து வழக்கில் வீடியோ கால் மூலம் ஆஜராக விஜய் அதிரடி மனு...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான குடும்பப் பிளவு வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.

இருதரப்பினரின் மனுக்களையும் பரிசீலித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கை வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 2021ஆம் ஆண்டிலிருந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்தது தமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், எந்தவித அழுத்தமும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அந்த நடிகையின் விவரங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சசிகலா இருவரும் ஜூன் 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கை அன்றைய தேதிக்கு மாற்றியுள்ளார்.

இதனையடுத்து, நேரில் ஆஜராகாமல் காணொலி வாயிலாக (Video Call) பங்கேற்க அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தனிப்பட்ட குடும்ப விவகாரம் என்பதால், இதுகுறித்து ஊடகங்களில் விவாதிக்கவோ செய்திகளை வெளியிடவோ கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் விஜய் தரப்பில் தனி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று, சங்கீதாவும் காணொலி வழியாக ஆஜராக அனுமதி கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், இருவரும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பிரிவதற்கான சுமூக முடிவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ஜூன் 15ஆம் தேதி இருவரும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ விளக்கம் அளித்த பின் தான் வழக்கின் அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sangeeta case Vijay urgent plea appear divorce case via video call


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->