'விஜய் மீது ஆக்ஷன் எடுங்க...! பிரசாரத்தில் பக்தி எதற்கு'...? - தேர்தல் ஆணையத்திற்கு பெ.சண்முகம் அதிரடி டிமாண்ட்...!
Take action against Vijay Why devotion campaigning P Shanmugam demand Election Commission
தமிழக அரசியல் களத்தில் புதிய அலை எழுப்பியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.இதன் தொடர்ச்சியாக, திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ‘ரோடு ஷோ’ மூலம் மக்கள் ஆதரவை திரட்டிய அவர், வயர்லஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு பங்குத்தந்தையால் வரவேற்கப்பட்ட விஜய், ஆலயத்திற்குள் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மசூதியிலும் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மசூதி நிர்வாகம் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பளித்ததுடன், அவர் வழிபாட்டிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மட்டும் நின்றுவிடாமல், பின்னர் ஒரு கோவிலுக்கும் சென்ற விஜய், சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தீபாராதனையை பெற்றார். அப்போது அம்மன் சன்னதியின் முன் தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய நிகழ்வு அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கியதுடன், குடும்பத்தினருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த பிரசார நடவடிக்கைகள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ. சண்முகம், மத வழிபாட்டு தலங்களில் கட்சி அடையாளங்களுடன் சென்று வாக்கு கேட்பது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு முரணானது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுத்து, விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Take action against Vijay Why devotion campaigning P Shanmugam demand Election Commission