சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக்! ஏப்ரல் 23-ல் கொடைக்கானல் பக்கம் போனா ஏமாற்றம்தான்...! - முக்கிய இடங்கள் மூடல்!
Going Kodaikanal April 23 disappointment Important places closed
தமிழ்நாடு மாநிலத்தில் அரசியல் சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே மீதமுள்ளதால், முக்கிய அரசியல் தலைவர்கள் சூறாவளி வேகத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பிரசார களத்தில் கடைசி கட்ட போராட்டம் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த பரபரப்பான தேர்தல் சூழ்நிலையில், வாக்குப்பதிவு நாளான 23ஆம் தேதி கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் மற்றும் பேரிஜம் ஏரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் அன்றைய தினம் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
English Summary
Going Kodaikanal April 23 disappointment Important places closed