'கருத்துக் கணிப்பு இல்லை கடுப்பில் விட்ட கணிப்பு'; திமுகவை விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்று மாலை 06 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று சென்னையின் சில இடங்களில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின்னர், பிற்பகல் சுமார் 03 மணி அளவில் நந்தனம் YMCA மைதானத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் திமுக, எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக என அடுத்தடுத்த விமர்சனங்களை முன்வைத்தார். அத்துடன், கரூர் தொடர்பாகவும், செந்தில் பாலாஜி தொடர்பாகவும் குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், கருத்து கணிப்பு குறித்தும், வாக்காளர்களின் புள்ளிவிவரங்கள் குறித்து அவர் பேசுகையில், ''ஸ்டாலின் சாரும், மற்றும் பலரும் சேர்ந்துக்கொண்டு கருத்துக் கணிப்பு எனும் பெயரில் கடுப்புக் கணிப்புகளை எல்லாம் வெளியிடுகிறார்கள். அதில் திமுக 300 சீட்டுகளும், மற்றும் பலர் 200 சீட்டுகளும் வெல்வார்கள் என சொல்கிறார்கள். தில்லுமுல்லுக்கு அளவே இல்லை என்று விமர்சித்துள்ளார்.

அதிலும், 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் தான் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்றும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் விஜய்க்கு போனாபோது என வாக்களிப்பார்கள். 40 வயதுக்கு கீழே இருக்கும் வாக்காளர்கள் குறைவாகவும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அதிகம் எனவும், அவர்கள் யாரும் விஜய்க்கு வாக்களிக்கமாட்டார்கள் என சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.

இதற்கெல்லாம் ஓங்கி மண்டையிலேயே நறுக்கென குத்துவதுபோல், தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதில், 50 வயதுக்கு கீழ் இருக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை 03 கோடியே 65 லட்சம் என்று தெரிவித்துள்ளது. இதில், பெண்கள் மட்டுமே 01 கோடியே 77 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதனால், கருத்துக் கணிப்பு, கடுப்பில் விட்ட கணிப்பு என திமுகவும், மற்றும் பலரும் மண்ணை கவ்வப்போவது உறுதி என கட்டமாக விஜய் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Criticizing the DMK TVK leader Vijay remarked that it was not a genuine opinion poll but rather a prediction born out of frustration


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->