சென்னைக்கு விரையும் கோவை தூய்மை பணியாளர்கள்.!
coimbatore muncipality cleaning employees going to chennai
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க தமிழ்நாடு முழுவதும் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சியில் இருந்து முதல் கட்டமாக இன்று 400 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு பத்து பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், ஐந்து லாரிகளில் தூய்மை பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையனை, உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், முதல் உதவி சிகிச்சை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நேரடியாக தூய்மை பணியாளர்களிடம், தூய்மை பணியின்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை சொல்லி வழியனுப்பி வைத்தார்.
English Summary
coimbatore muncipality cleaning employees going to chennai