வீட்டில் உள்ளவர்களே கைவிரிப்பு.. பாஜக வேட்பாளரின் பரிதாபம்.. ஒரேயொரு ஒட்டு தான் அப்பு..! - Seithipunal
Seithipunal


குடும்பத்தில் 5 பேர் இருந்தும், ஒரேயொரு வாக்கு மட்டும் பதிவாகி பாஜக வேட்பாளர் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கார்த்திக். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில், குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு பதவி காலியிடமாக இருந்த நிலையில், அதற்கு இடைத்தேர்தல் வைக்கப்பட்டுள்ளது. 

9வது வார்டு பதவிக்கு கார்த்திக் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவில் அவருக்கு ஒரேயொரு வாக்குகள் மட்டுமே பதிவாகி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. 

அவரது குடும்பத்தில் மொத்தமாக 5 பேர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், 5 பேரும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என்று தெரியவருகிறது. வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த கார்த்திக், சொந்த வீட்டில் வாக்கு சேகரிக்க மறுத்துவிட்டார் என்றே கூறலாம். 

குடும்பத்தில் 5 பேர் இருந்தும், குடும்பத்தில் இருந்து ஒரேயொரு வாக்குகள் கூட பதிவாகாத விரக்தியில் பாஜக கார்த்திக் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Kurudampalayam Village President By Election BJP Candidate Karthick Getting one Vote Only


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal