மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறான ஒன்று - அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- "சேகோ தொழிற்சாலையில் உள்ள பிரச்சனைகளை உற்பத்தியாளர்கள் சரி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்களே திருத்திக் கொள்ள வேண்டும். 

இதுவரை செய்த தவறை போல் இனிமேல் தவறு செய்ய அரசு அனுமதிக்காது. ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் குறிப்பாக, சில வடமாநில மக்களுக்கு ஜவ்வரிசி தான் உணவாக உள்ளது. 

மேலும், மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறு என்பதை உணர்ந்து தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை அரசு சரி செய்வதற்கு தயாராக உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்கள் தவறு செய்ய வேண்டாம்"  என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coimbatore collecter office meeting minister anbarasan speach


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->