கோவையில் விமானப்படை அதிகாரி பாலியல் பலாத்கார விவகாரம் - சிறையில் அடைக்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள பந்தய சாலையில் அமைந்துள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், கடந்த 10 ஆம் தேதி விமானப்படை அதிகாரி அமிதேஷ், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சக பெண் காவல் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல்  அதிகாரிகள் தட்டிக்கழித்த நிலையில், பெண் அதிகாரி கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் மகளிர் காவல் துறையினர், விமானப்படை அதிகாரி அமிதேஷை கைது செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், கோயம்புத்தூரில் உள்ள குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் அமிதேஷ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி என இருவரும் ஆஜரான நிலையில், அமிதேஷின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 30 ஆம் தேதி நீட்டித்து உத்தரவிட்டு இருக்கின்றனர். 

முன்பாக, அமிதேஷ் காவல் துறையினர் விமான படை அதிகாரியான தன்னை கைது செய்ய அதிகாரம் இல்லை என்று வாதிட்ட நிலையில், 2 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இன்று அமிதேஷுக்கு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Air Force Officer Sexual Abuse Case Court Announce Sep 30 Remaining Jail


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal