அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் மரணம்..! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை பகுதியை சார்ந்தவர் தாமோதரன் (வயது 71). இவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்குகையில், கடந்த 1972 ஆம் வருடத்தில் பொங்கலூர் தொகுதி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். 

கடந்த 33 வருடமாக சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், பொங்கலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2002 ஆம் வருட தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். இதனைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

இதன்போதே, கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளராக முன்னாள் மறைந்த முதல்வரான ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 2006 ஆம் வருட தேர்தலில் 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். 

தற்போது, கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி கொரோனா பாதிப்பு அடைந்து நீலம்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்து இருந்த நிலையில், கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பாதிப்பால் அவதியுற்றுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore ADMK Ex Minister Damodharan Passed Away


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal