கீரையில் கிடந்த கரப்பான் பூச்சி - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அடையாறு ஆனந்த பவன்.!
Cockroach found in adaiyaru anantha bavan food in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் நூறு ஆதி சாலையில் செயல்பட்டு வரும் டெலி காலர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்றும் இந்த நிறுவனம் இயங்கும் நிலையில், அன்றைய தினம் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணிபுரிபவர்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று அந்த நிறுவனம் இயங்கிய நிலையில், கார்த்திகை தீபம் என்பதால் அசைவ உணவிற்கு பதிலாக காந்திபுரத்தில் உள்ள அடையாறு ஆனந்த பவன் உணவகத்தில் பணியாளர்களுக்கு சைவ உணவு வாங்கப்பட்டுள்ளது.

அதன் படி உணவை சாப்பிடும் போது, கீரையில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த பெண்கள், அதிர்ச்சி அடைந்து உரிமையாளரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, உணவகத்திற்கு சென்று கேட்ட போது, ஓட்டல் நிர்வாகம் சார்பில் இனிமேல் இது போன்று சம்பவம் நடக்காது என்று அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.
உடனே நிறுவனத்தின் உரிமையாளர் சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தை கேட்டபோது, இதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
English Summary
Cockroach found in adaiyaru anantha bavan food in coimbatore