பணியின்போதே உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் -  ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதுரை சித்திரை திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு இன்று வுத்துல செய்திக்குறிப்பில், "கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய நாட்ராயன், மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, கடந்த 19-4-2022 அன்று, இரவு சுமார் 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

இந்த செய்தியை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin mourning to police si natrayan death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->