மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்விட்! - Seithipunal
Seithipunal


இன்று வள்ளலார் 202 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "தனிப்பெருங்கருணை நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!"

"மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! 

உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்" என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தப்படி, திருஅருட்பிரகாச வள்ளலார் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் (“#தனிப்பெருங்கருணை_நாள்”) முன்னிட்டு கடலூர் மாவட்டம், வடலூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன் பங்கேற்று கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினோம்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MK Stalin tweet about vallalar birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->