கோடி கணக்கில் அபராதம்! பெரும் வேதனை! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 

இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடிக்கடி இலங்கை கடற் படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யப்படுவதால், மீனவ சமுதாயம் பெரும் துயரை சந்தித்து வருகிறது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நீதிமன்றம் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு கோடி கணக்கில் அபரதம் விதித்து, துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை வேதனையாக்கி உள்ளது. 

இப்படியான ஒரு இழப்பை ஏற்படுத்தும் அபராதத்தை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Letter to Central Minister for Fisher Man issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->