அமைதி பேரணியில் உயிரிழந்த திமுக கவுன்சிலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


அமைதி பேரணியில் உயிரிழந்த திமுக கவுன்சிலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.!

நேற்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் சென்னை மாநகராட்சி 146 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சண்முகம் என்பவர் பங்கேற்றார். இதையடுத்து இவர் வாலாஜா சாலையை கடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த சக திமுகவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சண்முகத்தின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் உயிரிழந்த சண்முகத்தின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

"சென்னை மாநகராட்சியில் 146 வது வார்டு உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான சண்முகம் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற நிலையில் இயற்கை எய்தினார்.

 இந்த செய்தி கேட்டு பேர்திர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM mk stalin condoles to dmk counsiler sanmugam family


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->